புஜாராவுக்கு வாய்ப்பு கொடுத்த IPL அணி…!

புஜாராவுக்கு வாய்ப்பு கொடுத்த IPL அணி…!

இந்திய கிரிக்கெட் சுவர் என்று அழைக்கப்படும் புஜாராவுக்கு இம்முறை IPL போட்டிகளில் விளையாடும் அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமேயான ஒரு வீரராக புறம்தள்ளப்பட்ட புஜாராவை, இம்முறை சென்னை அணி 50 லட்ஷம் கொடுத்து அணிக்குள் எடுத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை காப்பாற்றும், கரை சேர்க்கும் ஒரு முன்ணணி துடுப்பாட்ட வீரரான புஜாராவை IPL அணிகள் கணக்கில் எடுக்காமல் இருந்தமை மிகப்பெரிய வேதனையானதே.

இம்முறை IPL ல் விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளியிட்ட புஜாராவுக்கு சென்னை அணி வாழ்வு கொடுத்துள்ளது.உண்மையில் இது சென்னை அணியால் இந்திய தேசிய கிரிக்கெட்டுக்கு செய்திருக்கும் மிகப்பெரிய நன்றி உபசாராமாகும்.

சுப்பிரமணியம் பத்ரிநாத் போன்று புஜாராவுக்கு சென்னை வாய்ப்பு கொடுத்தாலும் சிறப்பம்சமே.

கௌதம்-9.25 கோடி
மொயின் அலி- 7 கோடி
புஜாரா 50 லட்ஷம்

கொடுத்து சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.