புஜாரா, ரஹானேயின் நான்காம் நாள் ஆட்டம் மிகப்பெரிய போராட்டம்-இறுதி நாளை நோக்கி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டி…!

புஜாரா, ரஹானேயின் நான்காம் நாள் ஆட்டம் மிகப்பெரிய போராட்டம்-இறுதி நாளை நோக்கி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டி…!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 364 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் அணித்தலைவர் ரூட் ஆட்டமிழக்காது 180 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள முதல் இன்னிங்சில் 391 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

போராட்டத்திற்கு மத்தியில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி இன்றைய நாள் ஆட்டநேர நிறைவுக்கு வருகின்றபோது 181 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து உள்ளது.

இங்கிலாந்து அணியை விடவும் இந்திய அணி 154 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

நாளை இறுதி நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது, இந்தியா 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தாலும் மற்றும் புஜாரா, ரஹானே ஆகியோர் நின்று நிதானித்து காட்டிய பொறுப்பாட்டம் காரணமாகவே இந்தியா மேலதிகமான விக்கட் இழப்மை இன்றைந நாளில் தவிர்த்தமை குறிப்பிடத்தக்கது.
ரஹானே அரைசதம் (61) அடித்தார், புஜாரா 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்..

இப்போது ஆடுகளத்தில் பான்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் இருக்கின்றனர் நாளை 5 ஆவதும் இறுதியுமான நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது .

சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு சாதகத்தை ஏற்படுத்தக் கூடிய நாளாக நாளைய நாள் இருக்கும் என நம்பப்படுகிறது, இந்தியா குறைந்தது வெற்றி இலக்காக 200 ஓட்டங்களை பெற்றுக் கொண்டால் இந்த போட்டி ஒரு போராட்டம் மிகுந்த விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என நம்பப்படுகிறது.