புஜாரா, ரோகித் சர்மாவிற்கு உபாதை- இந்திய கிரிக்கெட் சபை தகவல் ..!

புஜாரா, ரோகித் சர்மாவிற்கு உபாதை- இந்திய கிரிக்கெட் சபை தகவல் ..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.

இங்கிலாந்தின் வெற்றிக்கு முன் 368 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் சபை புஜாரா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு உபாதை ஏற்பட்டு இருப்பதாக அறிவித்தது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 466 ஓட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இருந்த மிகச்சிறந்த 153 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை புஜாரா, ரோகித் சர்மா ஆகியோர் புரிந்தனர்.

இவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடும்போது உபாதையை சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது, ரோஹித்தின் இடது முழங்காலில் உபாதையால் வலி உள்ளது, அதேபோல் புஜாராவின் இடது கணுக்காலில் வலி உள்ளது.

இதனடிப்படையில் இப்போது இங்கிலாந்தில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாட்டத்தின் போது புஜாரா, ரோகித் சர்மா ஆகிியோர் களத்தடுப்புக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதி டெஸ்ட் போட்டியில் இவர்களுடைய உபாதையில் சுகமாகிவிடுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.