புதிய உலகசாதனைக்கு தயாராகும் கிங் கோலி..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்ட காத்திருக்கின்றார்.

இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் திகதி சவுத்தம்ரன் நகரில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது ,இந்த போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரராகவுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை நான்கு வகையான உலக தொடர்களை நடத்தி வருகின்றது.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கிண்ணம், T20 போட்டிகளுக்கான உலக்கிண்ணம், இது மாத்திரமல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி, இதையும் கடந்து இப்போது நிலையில் நடத்திக்கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் (டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக்கிண்ணம்) இப்படியான நான்கு வகையான தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய உலகின் ஒரே வீரன் எனும் பெருமை கோலிக்கு கிடைக்கப் போகிறது.

ஏற்கனவே 2011 ஒருநாள் போட்டிகளுக்கான உலக்கிண்ணத்திலும், 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சாம்பியன்ஸ் டிரோபி இறுதிப் போட்டியிலும், 2014ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் விராட் கோலி விளையாடியுள்ளார்.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரோடு விராட் கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் விளையாடினால் ICC யின் அனைத்து உலக்கிண்ண தொடர்களின் இறுதிப் போட்டிகளிலும் விளையாடிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.