புதிய உலக சாதனை படைத்த பாகிஸ்தானின் மொகமட் ரிஸ்வான்..!

புதிய உலக சாதனை படைத்த பாகிஸ்தானின் மொகமட் ரிஸ்வான்..!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான டுவென்டி டுவென்டி தொடர் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் இன்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரிஸ்வான் ஒரு உலக சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஆண்டில் டுவென்டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் எனும் உலக சாதனை இன்று ரிஸ்வானால் படைக்கப்பட்டது.

மொகமட் ரிஸ்வான் இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதம் அடங்கலாக 752 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

சராசரி 94 ஓட்டங்களாக காணப்படுகிறது, 140 க்கும் அதிகமாக Strike Rate உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இன்னும் இந்த ஆண்டு நிறைவுக்கு வருவதற்கு 5 மாதங்கள் இருப்பதால் இன்னும் அதிகமான ஓட்டங்களை ரிஸ்வானால் குவிக்க முடியும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.