புதிய உலக சாதனை படைத்த ரொனால்டோ – புகழ்ந்து பாராட்டும் கின்னஸ் உலக சாதனைத்தளம்..!

“நான் பார்த்த மிக அற்புதமான இளம் வீரர்களில் ஒருவர்” என்று 2003 ஆம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவை (போர்த்துகல்) மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் மேலாளர் sir அலெக்ஸ் பெர்குசனால் புகழப்பட்டு ரொனால்டோ உற்றுநோக்கப்படுகிறார்.

விரைவில், ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டின் முதல் போர்த்துகீசிய கால்பந்து வீீீர்ராக ஒப்பந்தமாகிறார்.

அலெக்ஸ் பெர்குசன் எனும் கால்பந்து உலகின் ராஜாவால் பட்டை தீட்டப்பட ஆரம்பிது, இன்று கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு இருக்கிறார்.

ஆம் இன்று அவர் உலகின் அதிக கோல்கள்  பெற்ற வீரர் எனும் உலக சாதனையை படைத்து கின்னஸ் உலக சாதனைத்தளம் புகழ்ந்து பாராட்டும் வண்ணம் கால்பந்து உலகின் அசகாய சாதனையாளராக மிளிர்ந்திருக்கிறார்.

நேற்று 1 செப்டம்பர் 2021 அல்கர்கேவ் ஸ்டேடியத்தில் (போர்த்துகல்) நடந்த போர்த்துகல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான உலக்கிண்ண தகுதிகாண் போட்டியின்போது சர்வதேச கால்பந்து போட்டிகளில் (ஆண்) அதிக கோல்கள் அடித்த சாதனையை போர்த்துகீசிய கால்பந்து வீரர் ரொனால்டோ முறியடித்துள்ளார்.

முன்னதாக, ரொனால்டோ 1993 மற்றும் 2006 க்கு இடையில் 109 கோல்களை அடித்த அலி டேய் (ஈரான்) வீரரது உலக சாதனையைப் சமப்படுத்திக் கொண்டார்.

அயர்லாந்துக்கு எதிராக, நேற்றைய போட்டி முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ரொனால்டோ தனது சொந்த சாதனையை 111 கோல்களை அடித்து முறியடித்து கால்பந்து உலகின் நாயகனாக முடிசூடிக் கொண்டார்.

டேய் ஈரான் தேசிய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தவர், அத்தோடு 2006 இல் பயிற்சியளிக்கத் தொடங்கினார். அவர் இப்போது ஒரு கால்பந்து முகாமையாளராக இருக்கிறார்,

 சாம்பியன்ஸ் லீக் கோல்களுக்கான பட்டத்தையும் (134 கோல்கள்) , அதே போல் UEFA சாம்பியன்ஸ் லீக் சீசனில் ஒரு தனிநபர் அடித்த அதிக கோல்கள் (17) மற்றும் UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் எனும் ஏராளமான சாதனைகளும் ரொனால்டோ வசமே காணப்படுகின்றது.

சமூக ஊடகங்களிலும் ரொனால்டோ சாம்பியனாகவே திகழ்ந்து வருகின்றார்.

ட்விட்டரில் ஒரு விளையாட்டு வீரரை அதிகம் பின்தொடர்பவர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு தடகள வீரரை அதிகம் பின்தொடர்பவர்கள் என்ற சாதனையையும் ரொனால்டோ வைத்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் @Cristiano என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு, 2017 ஆம் ஆண்டில் செலினா கோமஸின் 120,135,089 பின்தொடர்பவர்களைத் முறியடித்து, இன்ஸ்டாகிராமில் ஒட்டுமொத்தமாகப் அதிகம் பின்தொடரப்பட்ட கணக்காக சாதனை படைக்கப்பட்டது.

சர்வதேச கால்பந்தின் லெஜன்டான, ரொனால்டோவின் விக்கிபீடியா பக்கம் 112,000,000 பார்வைகளைக் கொண்டுள்ளது, இது ஒரு விளையாட்டு வீரருக்கான (ஆண்) அதிகம் பார்க்கப்பட்ட விக்கிபீடியா பக்கம்.

ரொனால்டோவின் வாழ்க்கை அவருக்கு 12 வயதாக இருந்தபோது ஸ்போர்டிங் சிபி யில் தொடங்கியது, அவர் பந்தை , போர்ச்சுகலின் எல்லா நேரத்திலும் சிறந்த கோல் அடித்தவர்.

ஸ்போர்டிங் சிபி யின் இளைஞர் அணியில் இருந்து அவர் பதவி உயர்வு பெற்ற பிறகு, அவர் அனைத்து கிளப்பின் இளைய அணிகளுக்காகவும் (16 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள்) விளையாடிய முதல் வீரர் ஆனார்.

அதே ஆண்டில், அவர் B அணியிலும் பின்னர் முதல் அணியிலும் உயர்ந்தார், ஸ்போர்டிங் லிஸ்பனுக்கான சூப்பர் கப்பை வென்றார் – அனைத்தும் அவரது முதல் சீசனுக்குள் நடந்தது. மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு மாற்றப்பட்ட பிறகு, 23 வயதில், அவர் தனது முதல் பலோன் டி’ஓரை வென்று அசத்தினார்.

கோல் பின் கோல் என்று ரொனால்டோ அணிகள் மற்றும் போட்டிகளைப் பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்தமான கால்பந்து ரசிகர்களின் இதயங்களையும் வென்றார்,  ஐரோப்பிய சாம்பியன்ஷிப் யூரோ கிண்ணத்தை 2016 ல் போர்த்துகல் வெற்றி கொள்ளவும் காரணமானார்.

வாழ்க்கையில் அதிகம் சம்பாதித்த ஒரே கால்பந்து வீரராக ஆனார், மற்றும் எல்லா காலத்திலும் மிகவும் விரும்பப்பட்ட, பாராட்டப்பட்ட மற்றும் வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக தன்னை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் ரொனால்டோ.

மன்சஸ்டர் யுனைட்டட், ரியல் மேட்ரிட் ,யுவேன்டஸ் இப்போது மீண்டும் தன்னுடைய தாய் கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கு 36 வயதில் கால் பதித்திருக்கிறார் ரொனால்டோ.

கால்பந்து உலகில் ஏராளமான அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரொனால்டோ ,கால்பந்து உலகில் இருந்து விடைபெறுகிறபோது எல்லா சாதனைப் புத்தகங்களிலும் தன் பெயரை  எழுதி விட்டு செல்வார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ரொனால்டோவின் உலக சாதனையை கொண்டாடுவோம்

Previous articleஇந்தியாவின் உலகக் கிண்ண அணி எப்போது அறிவிக்கப்படும் தெரியுமா -இந்திய கிரிக்கெட் சபை தகவல்..!
Next articleரொனால்டோவின் மன்செஸ்டர் யுனைட்டட் சீருடைகளை ஆர்டர் செய்த எலிசபெத் மகாராணி ..!