புதிய சாதனையுடன் ஸ்மிருதி மந்தனா!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆரம்ப வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
2022 மகளிர் உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் பங்களதேசுக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா 17-வது ஓட்டங்களை கடந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை அடித்து மகளிர் கிரிக்கெட் பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மொத்தம் 30 ஓட்டங்களை எடுத்தார்.
அவர் 51 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்களை எடுத்தார்.
ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டியில் 2717 ஓட்டங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 326 ஓட்டங்களும் டி20 போட்டியில் 1971 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை கடந்துள்ளார்.