புதிய சாதனையை நிலைநாட்டினார் பங்களதேஷ் அணித்தலைவர் மோமினுல் ஹாக் !

பங்களாதேசின் சட்டோகிராம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி தலைவர் மோமினுல் ஹாக் சதம் அடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை நிலைநாட்டினார்.

பங்களதேஷ் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் எனும் சாதனையை இன்றைய 2-வது இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் மொமினுல் நிலைநாட்டினார்.

ஏற்கனவே 9 சதங்களை அடித்து இருந்த தமிம் இக்பால் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், மோமினுல் ஹாக் 10 ஆவது டெஸ்ட் சதம் அடித்து சாதனை புரிந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 (சதம்) – மொமினுல் ஹக்

9 – தமிம் இக்பால்

7 – முஷ்பிகுர் ரஹீம்

6 – மொகமட் அஷ்ரபுல்

5 – சகிப் அல் ஹசன்