புதிய சாதனையை நிலைநாட்டினார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்..!
14வது ஐபிஎல் போட்டி தொடரின் முக்கியமான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய வீீரர்களில் T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் 3வது இடம் கிடைத்துள்ளது.
என்று டேவிட் மில்லரின் விக்கெட்டை கைப்பற்றியபோது, அது அஷ்வினுடைய 250 வது T20 விக்கெட்டாக அமையப்பெற்றது.
இதே நேரத்தில் அஷ்வினை விடவும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் அமித் மிஸ்ரா ,பியுஸ் சௌவ்லா ஆகியோர் 262 விக்கெட்டுகளுடன் முதல் இரு இடங்களில் காணப்படுகின்றனர்.
இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அஷ்வின் 20 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை கைப்பற்றினார்.