புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் கேன் வில்லியம்சன் ,பெட் கமின்ஸ் ஆகியோர் முதல் இடத்தையும் பிடித்தனர்..!முழுமையான விபரம் உள்ளடக்கம்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை நேற்று வெளியானது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் பங்கேற்று கொண்டதற்கு பின்னர் இந்த புதிய தரவரிசை வெளியாகியது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இரண்டாவது இடத்துக்கு துடுப்பாட்ட தரவரிசையில் பின் தள்ளப்பட்ட கேன் வில்லியம்சன் இப்போது மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
ஸ்டீவ் ஸ்மித் 2 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் விராட் கோலி தொடர்ந்தும் நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்ரேலியாவின் கம்மின்ஸ் தொடர்ந்தும் முதலிடத்தில் என்பது குறிப்பிடத்தக்கது .
முழுமையான தரவரிசை