புதிய டெஸ்ட் தரவரிசை வெளியானது- ரூட் ஆதிக்கம் !

புதிய டெஸ்ட் தரவரிசை வெளியானது- ரூட் ஆதிக்கம் !

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் 3 ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் வில்லியம்சன், 2 ம் இடத்தில ஸ்டீவ் ஸ்மித் இருக்கும் நிலையில், 3 ம் இடத்துக்கு ஜோ ரூட் முன்னேறியுள்ளார், லாபிசேன் 4 ம் இடத்திலும், கோஹ்லி 5 ம் இடத்திலும் காணப்படுகின்றனர்.

ரஹானே 11 வது இடத்துக்கு பின்தள்ளப்பட்ட நிலையில், பான்ட் 13 வது இடத்திலும் காணப்படுகின்றனர்.

பந்துவீச்சில் ஆண்டர்சன் 3 இடங்கள் முன்னேறி 3 ம் இடத்திலும், அஷ்வின், பூம்ரா ஆகியோர் ஒவ்வொரு இடங்கள் முன்னேறி 7 ம், 8 ம் இடங்களையும் பிடித்துள்ளனர்.