புதிய தலைமையின் கீழ் பங்களாதேஷ் அணி ஆசியக்கோப்பையில் -அணி விபரம்..!
ஆசிய கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் மீண்டும் தலைமை தாங்கியுள்ளார். ஷகிப் அல் ஹசன் எதிர்வரும் நியூசிலாந்து டி20 முத்தரப்பு தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபீர் ரெஹ்மான், கடைசியாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் விளையாடியவர் இப்போது வங்கதேச அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் நடந்த டி20 தொடரில் ஓய்வில் இருந்த முஷ்பிகுர் ரஹீம் மீண்டும் வங்கதேச அணியில் இணைந்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் காயம் காரணமாக வரும் ஆசிய கோப்பையில் இருந்து விலகுகிறார்.
ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் நஜ்முல் ஹுசைன் சாண்டோ ஆகியோர் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். வங்கதேச அணியில் ஆல்-ரவுண்டர் முகமது சைபுதீன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் எபெடாட் ஹுசைன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயத்தால் அவதிப்பட்டு வரும் நூருல் ஹுசைன் அணியில் இடம்பிடித்துள்ளதாகவும், ஆனால் அவர் குறித்த அறிக்கை ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வங்கதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பைக்கான வங்கதேச அணி:
ஷாகிப் அல் ஹசன் (C), அனாமுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், அபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், முகமது சைபுதீன், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது, சப்பீர் ரஹ்மான், மெஹிதி ஹசன்ட், மெஹிதி ஹசன்டோஸ் நூருல் ஹசன், தஸ்கின் அகமது