புதிய தலைவரை அறிவித்தது பஞ்சாப் கிங்ஸ்…!

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சீசன்களில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் சென்று விட்டார். அவர் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

பஞ்சாப் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், ரபாடா உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். இதில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியில் கடந்த சீசன்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட இருந்தது.

 

அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படுவதாக, அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான மயங்க் அகர்வால் இதுவரை 100 போட்டிகளில் விளையாடிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Abdh