புதிய பந்தில் மேஜிக் நிகழ்த்தும் சிராஜ்- முழுமையான அலசல்…!

சிராஜ் மேஜிக்!

அப்-ரைட் ஸீம் (Upright seam) – படம் ஒன்றில் உள்ளது!

கிராஸ்-ஸீம் (Cross seam)- படம் இரண்டாவதில் உள்ளது!

Wobble ஸீம் – படம் மூன்றாவது உள்ளது!

முகமது சமி படம் ஒன்றில் உள்ள அப்-ரைட் (upright seam) மட்டுமே வீசக்கூடியவர். பும்ரா அப்-ரைட் மற்றும் கிராஸ் ஸீம் இரண்டையும் வீசக்கூடியவர். முகமது சிராஜ் மட்டுமே மூன்று ஸீமிலுமே வீசக் கூடியவர்.

இதில் ஸீம் என்பது ஒன்றுமில்லை பந்தின் மேல் உள்ள தையல்தான். இந்தத் தையலை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் பந்து வீச்சின் வித்தை இருக்கிறது.

Upright seam

பதிவுக்குள் செல்லும் முன் இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ளலாம். பந்தின் தையல் ஆடுகளத்தில் மோதும் பொழுது பந்து எகிறியும், சீற்றமாகவும், சில நேரங்களில் எதிர்பாராத திசையிலும் செல்லும். அதே பந்தின் தையல் அல்லாத பகுதி ஆடுகளத்தில் மோதும் பொழுது பந்து வழுக்கிக் கொண்டு தாழ்வாகச் செல்லும்.

முகமது சிராஜ் இதில் படத்தில் ஒன்றில் உள்ள அப்-ரைட் ஸீமை அவுட் ஸ்விங் செய்ய பயன்படுத்துகிறார்.

 

படம் இரண்டாவதில் உள்ள கிராஸ் ஸீமை பந்தை உள்நோக்கி வீசப் பயன்படுத்துகிறார். இந்த கிராஸ் ஸீமில் வீசும் பொழுது ஆடுகளத்தில் பந்து தையலில் படுமா? அல்லது தையல் அல்லாத பகுதியில் படுமா என்று பேட்ஸ்மேனுக்கும் தெரியாது பந்துவீச்சாளருக்கும் தெரியாது. எனவே எப்படி படுகிறதோ அதற்கு ஏற்ற வினையைச் செய்யும்!

Cross seam

இப்படி பந்தை உள்ளே வெளியே வீச பந்தின் தையலை இரண்டு விதமாகப் பயன்படுத்தி இரண்டு விதமான விளைவுகளை உருவாக்குகிறார். பேட்ஸ்மேன்களை இப்படியும் அப்படியும் ஆக செட் செய்து ஏதாவது ஒரு விதத்தில் வீழ்த்துகிறார்.

அடுத்து படம் மூன்றில் உள்ள wobble ஸீம். இதற்கும் மற்ற இரண்டு ஸீமுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பந்தை அப்ரைட் ஸீமிலோ இல்லை கிராஸ் ஸீமிலோ பந்தை பிடிக்கும் பொழுது, தையல் மேல் பரவும் நமது நடு விரலும் ஆள்காட்டி விரலும் பக்கம் பக்கமாக இல்லாமல், விலக்கமாகத் தளர்வாக பிடித்து வீசுவதுதான்.

Wobble seam

சரி இப்படி வீசுவதால் மூன்றாவதாக என்ன விளைவு உருவாகும் என்றால், நடைபழகும் குழந்தை எந்த திசையில் செல்கிறதோ, அந்த திசை நோக்கி இடது வலது என்று அலைபாயுதலோடு சென்று சேரும். இந்த wobble ஸீமில் பந்தின் தையல் மேல் விரல்களை விலக்கமாகவும் தளர்வாகவும் வைத்து, காற்றில் வீசும் பொழுது, தலையாட்டி பொம்மையின் அசைவில் பந்து இடது வலது என்று ஒரு ஊசலாட்டத்தோடு போய், தரையில் இடதாகவோ வலதாகவோ, தையலிலோ அல்லது தையல் அல்லாத பகுதிகளோ விழுந்து அதற்கேற்ற வினையைச் செய்யும்!

முகமது சிராஜ் இப்படி மூன்று விதமான ஸீம்கள் மூலம் மூன்று விதமான எதிர்பாராத விளைவுகளை உருவாக்குவதால்தான் அவரைக் கட்டுப்படுத்துவது குறிப்பாக புதிய பந்தில் கட்டுப்படுத்துவது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய திண்டாட்டமாக இருக்கிறது!

இது மட்டும் அல்லாமல் முகமது சிராஜ் தற்போது தனது பந்துவீச்சு லென்த்தில் தொடர்ந்து உழைத்திருக்கிறார். அவரால் ஒரு ஓவரின் தொடர்ந்து ஆறு பந்துகளையும் சரியான இடத்தில் விழச் செய்ய முடிகிறது. அதாவது அவரது தசைகள் இயல்பாக அதற்கு பழகி இருக்கின்றன. அந்த அளவிற்கு பயிற்சிகள் மூலம் தன் தசைகளைப் பழக்கி இருக்கிறார்!

இந்த இடத்தில் முகமது சிராஜ் மேலும் என்னை வியக்க வைக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால், அவரிடம் இருக்கும் எந்த பந்துவீச்சு திறமையும் இயல்பில் இருந்தது போல் தெரியவில்லை. இத்தனையையும் அவர் போராடி கற்றுத் தேறி வந்திருக்கிறார் என்பதுதான்!

✍️ Richards

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇