இருபதுக்கு இருபது போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்து டேவிட் வோர்னர் சாதனை படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் சான் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் வோர்னர் இந்த மைல்கல்லை எட்டினார்.
டேவிட் வோர்னருக்கு முன்னர் இந்த சாதனையை கெயில்,பொல்லார்ட், சோயிப் மாலிக் ஆகியோர் படைத்துள்ளனர்.ஆயினும் எந்தவொரு இந்திய கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை இதுவரை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கெயில் – 13,839 ஓட்டங்கள்
கிரான் பொல்லார்ட் – 10,964 ஓட்டங்கள்
சோயிப் மாலிக் – 10,488 ஓட்டங்கள்
டேவிட் வோர்னர் – 10,000* ஓட்டங்கள்