புதிய மைல்கல்லை எட்டிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்..!

புதிய மைல்கல்லை எட்டிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு பந்துகள் மீதமிருக்க போட்டியில் வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் இறுதியாக அடித்த பவுண்டரியுடன் கொல்கத்தாவின் வெற்றி உறுதியானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறைவான ஓட்ட எண்ணிக்கையாக இருந்தாலும் சற்று நிதானமாக போட்டியில் துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக் ஒரு மைல்கல்லை எட்டினார், ஐபிஎல் போட்டிகளில் 4,000 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற சாதனையை தினேஷ் கார்த்திக் படைத்தார்.

IPL ல் அடுத்த ஆண்டு Mega Auction இடம்பெறவுள்ள நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய துடுப்பாட்ட பலத்தையும் நிரூபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வெற்றி மூலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது, அடுத்து வரவுள்ள ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் அவர்களுக்கான இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணியை பின்தள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

இல்லை என்றால் நான்காவது இடத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிடித்த விடக்கூடிய அதிகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன.