புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் -தவான் ஜோடி சாதனை..!

இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துடனான ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளனர்,

ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்தசாதனை மூலமாக சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்தனர். ரோஹித் மற்றும் தவான் தொடக்க ஜோடியாக 5000 ஒருநாள் ரன்களை நிறைவு செய்தனர்.

லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்த ஜோடி இந்த சாதனையை படைத்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு ஜோடிகளால் மட்டுமே இந்த மைல்கல்லை எட்ட முடிந்தது, சச்சின் மற்றும் கங்குலி 6609 ரன்களுடன் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஜோடி 5372 ரன்களும், டெஸ்மன் ஹெய்ன்ஸ் மற்றும் கோர்டன் கிரீன்ரிட்ஜ் (5150) ஜோடியும் உள்ளனர்.

தவான் மற்றும் ரோஹித் ஜோடி இந்தியாவுக்காக இணைந்து 112 போட்டிகளில் மைல்கல்லை எட்டியது. அவர்களின் சராசரி 45.81 மற்றும் அவர்களின் ரன் எண்ணிக்கையில் 17 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

? ஒருநாள் போட்டிகளில் அதிக சத இணைப்பாட்டம்

டெண்டுல்கர் & கங்குலி – 26
சங்கக்காரா & ஜெயவர்த்தன – 20
ரோஹித் & தவான் – 18
கோஹ்லி & ரோஹித் – 18
கில்கிறிஸ்ட் & ஹெய்டன் – 16

#ENGvIND

YouTube காணொளிக்கு ?