இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இன்றைய சென்னை டெஸ்ட் போட்டியில் 300 வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.
தனது 98 வது போட்டியில் ஆடும் இஷாந்த் சர்மா இந்த சாதனையை படைத்தார், 300 விக்கெட்கள் எனும் மைல்கல்லை மெதுவாக எட்டிய வீரராகவும் இஷாந்த் சர்மா காணப்படுகின்றார். முன்னர் இந்த சாதனையை டானியல் வெட்டொரி வைத்திருந்தார்.
அவருக்கு 92 டெஸ்ட் போட்டிகள் தேவைப்பட்டன.
இது மாத்திரம்லாலாமல் இந்தியா சார்பில் இந்த மைல்கல்லை எட்டிய 3 வது வேகப்பந்து வீச்சு வீரராவார். கபில் தேவ் , சஹீர் கான் ஆகியோரே முன்னைய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்.
முதல் 49 டெஸ்ட்டில் 138 விக்கெட்களையும் அடுத்து வந்த 49 டெஸ்ட்டில் 162 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா கைப்பற்றியுள்ளார்.
அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் அணில் கும்ப்ளே, கபில் தேவ், ஹர்பஜன், அஷ்வின், சஹீர் கான், ஆகியோரை தொடர்ந்து இஷாந்த் சர்மா 6 வது இடத்தைப் பிடித்துள்ளார்.