புதுவிதமான ஆசையை வெளியிட்டிருக்கும் கிளென் மேக்ஸ்வெல் .

புதுவிதமான ஆசையை வெளியிட்டிருக்கும் கிளென் மேக்ஸ்வெல் .

ஆஸ்திரேலியாவின் சகலதுறை வீரரான மேக்ஸ்வெல் தன்னுடைய புதுவிதமான ஆசையை வெளியிட்டுள்ளார் .

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு மட்டுமேயான சிறப்பு ஆற்றல் கொண்ட வீரராக மேக்ஸ்வெல் அடையாளப்படுத்தப் பட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் ஒருநாள் ,T20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுகிறார் .

ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆசிய நாடுகளுக்கு அவுஸ்ரேலியா சுற்றுப்பயணத்தை மேற்கொள்கின்ற போது டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் வருகின்ற 2022ஆம் ஆண்டு பருவகாலத்தில் அவுஸ்ரேலிய அணி ,இலங்கை ,பாகிஸ்தான் இந்தியா ,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் அந்த நேரத்தில் தனக்கு தன்னாலான எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ளார் .

தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆவல் கொண்டிருப்பதையும் இதன் மூலமாக மெக்ஸ்வெல் தேர்வாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.