புது விதமாக ஆட்டமிழந்த இலங்கையின் குணதிலக்க -சர்ச்சையை ஏற்படுத்திய ஆட்டமிழப்பு (வீடியோ இணைப்பு )
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நேற்றைய நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
போட்டியில் ஆரம்ப வீரராக மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த குணத்திலக்க, ஒரு புதுவிதமான விதியின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளில் பிரகாரம் களத்தடுப்புக்கு இடையூறு ஏற்படுத்த முற்படுவாராக இருந்தால் அந்த வீரர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார் .
அந்த மாதிரியான ஒரு முறைமையின் அடிப்படையில் நேற்று தனுஷ்க குணதிலக்க விற்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது, இது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியிலும் ,வீரர்கள் மத்தியிலும் பலத்த விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது .
போட்டியின் முடிவில் குறித்த சம்பவத்திற்காக தனுஷ்க குணதிலக்கவிடம் பொல்லார்ட மன்னிப்பு கோரியமை இங்கே சுட்டிக்காட்டதக்கது.
எது எவ்வாறாயினும் குறித்த சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டில் இன்றைய நாளில் பெருமளவு பேசுபொருளாக காணப்படுகிறது.
வீடியோ இணைப்பு
— Sawera Pasha (@sawerapasha) March 10, 2021