“பும்ரா, ஷமியை பற்றி பேசுவியா?”.. வாயை விட்டு வாங்கிக் கட்டிய பென் டக்கெட்..

“பும்ரா, ஷமியை பற்றி பேசுவியா?”.. வாயை விட்டு வாங்கிக் கட்டிய பென் டக்கெட்.. விளாசிய ரசிகர்கள்

இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் மீண்டும் ஒருமுறை இந்திய அணி மற்றும் இந்திய வீரர்களை சீண்டி தற்போது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார். இதை அடுத்து அவர் தனது சமூக வலைதளக் கணக்குகளை தற்காலிகமாக தானே முடக்கி வைத்துள்ளார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி இருந்தது. அப்போது இங்கிலாந்து அணி படுமோசமாக இரண்டு தொடர்களிலும் தோல்விகளை சந்தித்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அப்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தும். அதனால், இந்த தோல்வியை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை என சொல்லியிருந்தார்.

அவரது தலைக்கனமான பேச்சுக்கே பலரும் விமர்சனங்களை வெளியிட்டு இருந்தனர். இங்கிலாந்து அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் முதல் சுற்றிலேயே வெளியேறி இருந்தது. அதனால் பென் டக்கெட்டின் பேச்சை பலரும் சுட்டிக்காட்டி கேலி செய்து இருந்தனர்.

அந்த சம்பவத்தின் சூடு இன்னும் ஆறாத நிலையில் வரும் ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடக்க உள்ள ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் பும்ரா மற்றும் முகமது ஷமியை தான் எளிதாக சமாளித்து ரன் குவிப்பேன் என பேசியிருந்தார்.

உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களாக இருக்கும் பும்ரா மற்றும் முகமது ஷமி தங்களின் பந்துவீச்சால் தன்னை ஆச்சரியப்படுத்த முடியாது எனவும், அவர்களின் முதல் ஸ்பெல்லில் மட்டும் தான் சமாளித்து ஆடிவிட்டால் அதன் பின் எளிதாக ரன் குவிக்கலாம் என்றும் பேசி இருந்தார் பென் டக்கெட்.

IPL: ஐபிஎல் வரலாற்றில்

இதை அடுத்து அவர் இதற்கு முன் ஆடிய மோசமான ஆட்டங்களை எடுத்து வைத்து ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அவருக்கு எதிரான கேலி மற்றும் கிண்டல்கள் உச்சத்தை எட்டிய நிலையில் அவர் தனது ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளார். தொடர்ந்து வாய்சவடால் விட்டு வாங்கி கட்டி வருகிறார் பென் டக்கெட்.

Previous articleசிஎஸ்கே அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார்?
Next articleIPL- ஏமாற்றி வென்றதா சிஎஸ்கே? MI-க்கு எதிராக ஆட்டத்தில் ருதுராஜ்,கலில் பந்தை சேதப்படுத்தியதாக புகார்