புவனேஷ்வர் குமாரை அணிக்கு கொண்டு வாருங்கள்- டுவிட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஷாமி, பூம்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்ற திணறும் நிலையில் புவனேஷ்வர் குமாரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகின்றன.

இந்த போட்டியில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் அளவுக்கு இந்திய பந்து வீச்சாளர்களது பந்துகள் பெருமளவில் ஸ்விங் ஆகவில்லை.

இதனையடுத்து டியூக் பந்தை நன்றாக ஸ்விங் செய்யும் புவனேஷ்வர் குமாரைக் கூப்பிடுங்க, அவரை ஏன் தேவையில்லாமல் வெளியில் உட்கார வைக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

அவர் இறுதியாக விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ,புவனேஷ்வர் குமார் அதன்பிறகு அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் ட்விட்டரில் கருத்துக்கள் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.