புவனேஸ்வர் குமார் ஏன் இங்கிலாந்துக்கு அனுப்பபடவில்லை ? இந்திய கிரிக்கெட் எடுத்த அதிசய முடிவு ..!
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டுவென்டி டுவென்டி தொடர் இலங்கையில் இடம்பெற்று வருகிறது.
இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவின் 24 பேர் கொண்ட் டெஸ்ட் அணியில் மூன்று வீரர்கள் உபாதை அடைந்துள்ளதால், மாற்று வீீரர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பும் முயற்சிகளில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்டது.
ஆயினும் கூட இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் செய்யகூடியய புவனேஸ்வர் குமார் தேர்வின் போது கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இது குறித்து இந்திய கிரிக்கெட் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
புவனேஷ்வர் குமார் கடந்த 3 ஆண்டுகளாக Long Format கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை, உபாதைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், உலக டுவென்டி டுவென்டி போட்டிகள் வரை உபாதைகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பதற்கான முடிவை இந்திய கிரிக்கெட் எடுத்துள்ளதாக BCCI முக்கியஸ்தர் ஒருவர் ‘Times of India’ க்கு தெரிவித்துள்ளார் .
இதனை புவனேஸ்வர் குமாருடன் பேசி அதுவரை அவரை டெஸ்ட் போட்டிகளுக்கு பயன்படுத்துவதில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உபாதைகளால் அவதிப்படும் புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் விளையாட செய்து, மீண்டும் உபாதைக்குள்ளாகும் நிலைமையை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பாத காரணத்தால் புவனேஸ்வர் குமார் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.