29 வயசுலயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என்பது எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியவில்லை! அதிலும் இந்த பூரனின் ஓய்வு வருத்தத்தை அளிக்கிறது!
சின்ன வயசு தான் ஆனா இவரு சிக்ஸ் அடிச்சா பெரிய உசரத்துக்கு போகும்! இவரின் சிக்ஸர்களுக்கு பல ரசிகர்கள் உண்டு! நின்னு ஆடறது கொஞ்சம் நேரந்தான்! ஆனா இம்பேக்ட் பெரிய அளவில் இருக்கும் 💯
வெஸ்ட் இண்டீஸ்ல ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அதிரடி பேட்டர்கள் வலம் வருவாங்க! ஒரு சிலர் மின்னுவாங்க! கிறிஸ் கெய்ல், பொல்லார்ட் வரிசையில் பூரனுக்கும் அதிரடியில் இடம் உண்டு!
ஏனோ தெரியலை, மற்ற 20 ஓவர் லீக் போட்டிகளில் நிறைய ஆட ஆரம்பித்த பிறகு சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக ஆட விருப்பம் இல்லை போல பூரனுக்கு!
அணியில் அரசியல் பிரச்சினை, ஒப்பந்த ஊதிய உயர்வு பிரச்சினை இப்படி எல்லாம் இவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வைத்து விட்டதோ?
அல்லது,
இதற்கு மேல இந்த அணியில் இருந்தால் பிரயோஜனம் இல்லை, இனிமேல் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் தொடரில் மட்டும் ஆடினாலே போதும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டாரோ என்று தெரியவில்லை 💯
ஆனால் ஒன்று ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வெஸ்ட் இண்டீஸ் அணி இவரை போன்ற வீரர்களின் ஓய்வால் கூடிய விரைவில் ஜிம்பாப்வே அணியின் நிலைமைக்கு தள்ளப்படும் என்பதே உண்மை 💯
🥹 ஓய்வு குறித்து நிக்கோலஸ் பூரன் கூறியதாவது 👇👇👇
மிகுந்த சிந்தனை பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எனது ஓய்வு அறிவிப்பை அறிவிக்க முடிவு செய்துள்ளேன்.
நான் விரும்பும் இந்த விளையாட்டு, மகிழ்ச்சி, நோக்கம், மறக்க முடியாத நினைவுகள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு என பலவற்றை அளித்துள்ளது, தொடர்ந்தும் வழங்கும்.!
அந்த மெரூன் நிற உடையை அணிந்து தேசிய கீதத்திற்காக எழுந்து நின்று ஒவ்வொரு முறையும் நான் மைதானத்தில் கால் வைக்கும் போது எனக்குக் கிடைத்த அனைத்தையும் கொடுத்தது!
அந்த உணர்வுகள் உண்மையிலேயே வார்த்தைகளால் விவரிக்க கடினமாக உள்ளது….
அணியை கேப்டனாக வழிநடத்தியது ஒரு பாக்கியம், அந்த நினைவுகளை நான் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருப்பேன்…
ரசிகர்களுக்கு உங்கள் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்திய நீங்கள், நல்ல தருணங்களை ஒப்பிடமுடியாத ஆர்வத்துடன் கொண்டாடினீர்கள்…
என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வீரர்களுக்கு-இந்தப் பயணத்தை என்னுடன் நடத்தியதற்கு நன்றி உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் என்னை இவை அனைத்தையும் கடந்து செல்ல வைத்தது.
எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த சர்வதேச அத்தியாயம் முடிவடைந்தாலும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் மீதான எனது காதல் ஒருபோதும் தீராது!
அணிக்கும், இந்தப் பிராந்தியத்திற்கும் வெற்றியையும், எதிர்காலம் நல்லபடியாக அமைய வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்!
அதிரடியில் பெயர் பெற்ற பூரனின் இந்த ஓய்வு வெஸ்ட் இண்டீஸூக்கு மட்டுமல்ல பொதுவான கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இழப்பு தான் 😌
#NicholasPooran #westindiescricket #pooranretirement #cricketnews #cricketlovers