பெங்களூரை பந்தாடியது சூப்பர் கிங்ஸ் அணி -மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம்..!
14வது ஐபிஎல் தொடரின் 35வது போட்டி சற்று முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஓயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நிறைவுக்கு வந்துள்ளது .
சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 11 பந்துகளில் மீதமிருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் துடுப்பாட்டம் சந்தர்ப்பத்தை விராட் கோலி தலைமையிலான RCB க்கு வழங்கினார், இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி 156 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
ஒரு கட்டத்தில் 200 ஓட்டங்களை எட்டிவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் இறுதி நேரத்தில் மிகச் சிறப்பாகவும் சிக்கனமாகவும் பந்து வீசினர்.
ஆரம்ப விக்கட்டில் 111 ஓட்டங்கள் இணைப்பாட்டம் பெறப்பட்டது. படிக்கல் மற்றும் விராட் கோலி ஆகியோர் அற்புதமான சத சாதனை புரிந்தனர். முதல் 10 ஓவர்களில் 90 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட ஆர்சிபி, அடுத்து வந்த பத்து ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களை பெற்றது. முதல் 10 ஓவர்களில் 12 பவுண்டரிகளை விளாசிய ஆர்சிபி அடுத்து வந்த பத்து ஓவர்களில் 5 பவுண்டரிகள் மட்டுமே விளாசியது்.
இதனடிப்படையில் 157 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலகுவாக 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
சென்னை அணி விளையாடியிருக்கும் 9 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வியைத்தழுவியது, 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று உள்ளமை கவனிக்கத்தக்கது.
இதன் மூலமாக சென்னை புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளமை கவனிக்கத்தக்கது, சென்னை ரசிகர்களை தோனி தலைமையிலான சென்னை விசில் போட வைத்திருக்கிறது.
இந்தப் போட்டி தொடர்பில் தில்லையம்பலம் தரணிதரன் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்த காணொளி ???