பெங்களூர் vs ராஜஸ்தான் -இறுதிப் போட்டிக்கு நுழைவது யார் ?

பெங்களூர் vs ராஜஸ்தான்

பட்லருக்கு உள்ள வரும் பந்துகளில் பெரிய தடுமாற்றம் உண்டு. இதை வைத்து அவரை வீழ்த்த முடியாவிட்டாலும் பவர்-ப்ளேவில் கட்டுப்படுத்தி ரன்-பிரசரை மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றி விக்கெட் வாங்கலாம். பந்துவீச்சில் ரைட்-ஹேன்ட் பேட்ஸ்மேன்களுக்கு இயல்பாக உள்நோக்கி வீசக்கூடிய சிராஜ் இந்த திட்டத்தைச் செயல்படுத்தலாம்.

சஞ்சு சாம்சன் ஒரு சீனியர் ரிஷாப் பண்ட். எப்ப எப்படி அவுட்டாகி பெவிலியன்ல இருப்பாருனு யாருக்கும் தெரியாது. ஒரு ஷார்ட் பந்தை சிக்ஸர் அடிச்சிட்டு, அதே ரக பந்தில் அடுத்த ஓவரில் அவுட்டாகிற ஆள். அணியில் ஹசரங்கா இருப்பதால் சஞ்சுவை வீழ்த்த இவரையும் ஆயுதமாக்கலாம். ரெண்டு மூன்று பந்துகளில் போக்கு காட்டினால், சஞ்சு அடிப்பது ஒன்றே தீர்வுனு அட்டாக்ல இறங்க, விக்கெட் சான்ஸ் உண்டு. ஹசரங்கா கூக்ளிஸ் பலம். பட்லர்-சஞ்சுவுக்கு சரியான திட்டங்கள் பெங்களூரிடம் இருந்தாலே பாதி வெற்றி வந்த மாதிரிதான்.

பெங்களூர் அணிக்கு நம்பர் 9 வரை பேட்டிங் டெப்த் இருப்பது பலம். டீம்ல இருக்க பேட்ஸ்மேன்கள் அவங்களோட குறைந்தபட்ச பங்களிப்ப தந்தாலே போதும். குறிப்பா பிட்ச் சராசரியா இருந்தா ஸ்கோருக்குத்தான் போகனும். அஷ்வின்-சஹால் கூட்டணியில் குறைந்தபட்சம் ஒருவரின் நான்கு ஓவரிலாவது நாற்பது ரன்கள் வாங்குவதற்கு திட்டம் வேண்டும். இந்த முறை இந்தக் கூட்டணியைச் செயல் இழக்க வைக்க மேக்ஸியை ஆயுதமாக்கி பார்க்கலாம். லெப்ட்-ஹேன்ட் பாஸ்ட் பவுலர்களிடம் விராட்கோலியை விட கேப்டன் பாஃப் அதிகம் தடுமாறுகிறார். இந்த ஜோடி ட்ரெண்ட் போல்டை தாண்டிட்டா மேட்ச் பெங்களூரோடதுனு கூட சொல்லலாம்.

பெங்களூர்- ட்ரெண்ட் போல்ட், அஷ்வின்-சஹால் ஜோடிக்கு எதிரா திட்டங்கள் வேண்டும். பட்லர்-சஞ்சுவை வெளியே அனுப்ப அவர்களின் பலகீனத்தோடு மோத வேண்டும்.

ராஜஸ்தான்- ட்ரெண்ட் போல்டை தவிர்த்து மற்றவர்கள் சிக்கனமாகப் பந்துவீசுவதில் கவனம் செலுத்தி ரன் பிரசரை ஏற்றி விக்கெட் வாங்க முயற்சிக்க வேண்டும். பேட்டிங்-பவர்ப்ளேவில் விக்கெட்டை தராமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!

ம் நல்லா விளையாடறவங்க ஜெயிக்கட்டும்!

Richards