பென்சீமாவின் அசத்தல் ஹெட்ரிக் ,காலிறுதி வாய்ப்பை இழந்தது PSG, ரியல் மேட்ரிட் அசத்தல் ..!

2021/22 சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் காலிறுதிக்கு முன்னேறியது.

புதன்கிழமை பெர்னாபியூவில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ரியல் மாட்ரிட்டின் முக்கிய நாயகன் கரீம் பென்ஸேமா  ஹாட்ரிக் கோல் மூலம் அணி பின்னடைவிலிருந்து மீண்டும் வருவதற்கு ஊக்கமளித்தார்.

முதல் பாதியில் கைலியன் எம்பாப்பே மூலம் பிஎஸ்ஜி முன்னிலை பெற்றது, கணிசமான நேரம் PSG அணி ஒரு வெற்றி பெறுவது போல் இருந்தது.

ஆனால் இரண்டாவது பாதியில் ஜியான்லூகி டோனாரும்மாவின் ஒரு பயங்கரமான பிழை பென்சிமாவுக்கு ஒரு கோலைப் பரிசாக அளித்தது, அது ரியல் மாட்ரிட்டை வெற்றிக்கு தூண்டியது.

முதல் 60 நிமிடங்கள் பிஎஸ்ஜி அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் இருந்தது, முதல் பாதி ஆட்டம் 1-0 என நிறைவுக்கு வந்தும் மீதமான அடுத்த 15 நிமிடங்களுக்கும் பிஎஸ்ஜி அணியின் ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால் 61 நிமிடத்தில் அவர்களுடைய தலைவர் பென்சிமா அடித்து அற்புதமான கோலை தொடர்ந்து அடுத்து வந்த 17 நிமிடங்களுக்குள் பிஎஸ்ஜி அணிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த ரியல் மாட்ரிட் அணி முன்னிலை பெறுவதற்கு அணித்தலைவர் பென்ஷீமா வழி வகுத்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .

ஒரு கட்டத்தில் 60 நிமிடம் வரை 0-1 என்ற நிலையில் இருந்த ரியல்மாட்ரிட் அணி 78 ஆவது நிமிடத்தில் 3-1 என முன்னிலை பெற ஆரம்பித்தது ,அதிலிருந்து தொடர்ச்சியான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ரியல் மேட்ரிட் அணியை பென்ஸீமா காலிறுதிக்கு அழைத்துச்சென்றனர்.

நெய்மர், மெஸ்ஸி, அதேபோன்று எம்பாப்பே உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்த பிஎஸ்ஜி அணியில் இருந்தும் அவர்களால் காலிறுதிக்கு செல்ல முடியாத நிலையில் சேம்பியன் லீக் கால்பந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.