பென்ஸீமாவின் ஒப்பந்தத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது ரியல் மேட்ரிட் ..!
கால்பந்து உலகின் பிரபலமான கழகமாக கருதப்படும் ரியல் மேட்ரிட் கழகம் அவர்களுடைய முன்னணி கால்பந்து நட்சத்திரமான கரீம் பென்ஸிமாவின் ஒப்பந்த காலத்தை 2023 வரை நீடித்து உள்ளதாக அறிவித்துள்ளது.
அடுத்த பருவத்தோடு இவருடைய ஒப்பந்தம் நிறைவுக்கு வரும் நிலையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
33 வயதான கரிம் பென்ஸிமா 560 போட்டிகளில் விளையாடி 281 கோல்களை பெற்றுள்ளார், இது மாத்திரமல்லாமல் நான்கு சம்பியன் லீக் மூன்று லா லிகா மகுடங்களையும் கைப்பற்றுவதற்கு காரணமாக இருந்தவர்.
கழகத்தினுடைய தலைவர் சேரஜியோ ராமோஸ் அண்மையில் PSG கழகத்தில் இணைந்தார் ,இந்தநிலையில் பென்ஸீமாவை தக்கவைக்கும் முயற்சிகளை ரியல் மேட்ரிட் கழகம் மேற்கொண்டுள்ளது.