பென் ஸ்டோக்சின் உபாதை தொடர்பில் புதிய தகவல்..!

IPL தொடரின் முதல் போட்டியில் உபாதைக்குளான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் IPL தொடரிலிருந்து வருத்தத்துடன் வெளியேறினார்.

போட்டியின்போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக 3 மாதங்களுக்கு அவரால் போட்டிகளுக்கு திரும்ப முடியாதுள்ளதாக தெரியவருகின்றது.

வருகின்ற திங்கட்கிழமை மேலும் ஒரு மருத்துவப் பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பங்கேற்ற IPL ன் முதல் போட்டியில் ஸ்டோக்ஸ் இந்த இடது ஆட்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்திய வீரர்களுக்கான ஒப்பந்த சம்பள பட்டியல் வெளியானது..! நடராஜனுக்கு என்னவானது ?
Next articleநடராஜன் இந்திய ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை ஏன் தெரியுமா?