பெருமளவு பயிற்சி உபகரணங்களைக் கையளித்த ஶ்ரீலங்கா கிரிக்கெட்…!

நாடு முழுவதிலும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் 51 மாவட்ட மற்றும் மாகாண பயிற்றுவிப்பாளர்களுக்கான ‘பயிற்சி கருவிகளை’ இலங்கை கிரிக்கெட் கையளித்துள்ளது.

கொழும்பில் உள்ள RPICS இல் அண்மையில் கையளிக்கப்பட்ட பயிற்சிப் பெட்டிகள், fielding bats, சீனியர் மற்றும் ஜூனியர் பந்துகள், side arm , பிளாஸ்டிக் ஸ்டம்புகள், ஸ்பிரிங் விக்கெட்கள், ஸ்டாப் வாட்ச்கள், ஸ்ட்ரெட்ச் பேண்ட்கள் மற்றும் cooler box போன்ற பல முக்கிய பயிற்சி கருவிகளைக் கொண்டிருந்தனமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 37 மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள், 11 மாகாண பயிற்சியாளர்கள் மற்றும் 03 Provincial talent scout உள்ளடக்கிய 51 SLC நியமிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் குறித்த ‘பயிற்சி கருவிகள்’ பெற்றனர்.

உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன, உயர் செயல்திறன் மையத்தின் தலைவர் டிம் மெக்கஸ்கில் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் தேசிய அபிவிருத்தி சபையின் தலைவர் கமல் தர்மசிறி ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.