பேசும் படம்- தாய்ப்பாலூட்டும் ஹாக்கி வீராங்கனை…!

சேர ஸ்மால் எனப்படும் கனடாவை சேர்ந்த ஹாக்கி வீராங்கனை போட்டி நிறைவுக்கு வந்த பின்னர் போட்டியில் தான் பங்கெடுத்த அதே ஆடையுடன் தனது 7 மாத குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் படம் இதுவாகும்.

இந்தப்படம் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் சமூக வலைத்தளங்களில் அதிகம் உலாவியிருந்தது.

24 வயதான சேர ஸ்மால் இந்தப் படம் குறித்து தெரிவிக்கையில் , தனது தாய்ப்பாலூட்டும் படங்களை காண்பிக்கும் வரை புகைப்படம் எடுக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று கூறினார்.

இது அழகாகவும், சாதாரணமாகவும் பார்க்கப்பட வேண்டும். தாய்ப்பால் எப்போது வேண்டுமானாலும், எங்கும் ஊட்டப்படவேண்டியது எனவும் தெரிவித்தார்.

ஆகவே இதனை தவறான கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பதை தவிர்த்து ஒரு வெறிகொண்ட விளையாட்டு வீராங்கனையின் தாய்மை உணர்வை மதிக்கும் ஒன்றாக பார்ப்பதே விளையாட்டுக்கான பெருமையாகும்.