பேட்மின்டன் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார் PV சிந்து.. !
இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான PV சிந்து இன்று நிறைவுக்கு வந்துள்ள மகளிர் பிரிவு பேட்மின்டன் போட்டிகளில் மூன்றாவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
இறுதியாக 2016 பிரேசிலில் இடம்பெற்ற ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப்போட்டியில் விளையாடி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்ட சிந்து, இம்முறை தங்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனாலும் அரை இறுதி ஆட்டத்தில் சிந்து தோல்வியை தழுவினார், இந்த நிலையில் இன்று மூன்றாம் இடத்தைப் பெறுவதற்கான பெண்களுக்கான பெட்மின்டன் போட்டியில் பிவி சிந்து இலகுவாக 21-13, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.
இதன் மூலமாகவும் ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை பெற்று கொண்ட ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமைய PV சிந்துவுக்கு கிடைத்தது.