பொதுஇடத்தில் புகைபிடித்து மாட்டிக்கொண்ட இலங்கை வீரர்கள் – உடனடியாக நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை ..!

இங்கிலாந்துடனான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல ஆகியோரை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை கிரிக்கட் இன் தலைவர் சம்மி சில்வா தெரிவித்தார்.

குறித்த இருவரும் உயிர்குமிழி (Bio Bubble) முறைமையினை மீறி செயற்பட்டமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல ஆகிய இரு வீரர்களும் இங்கிலாந்தின் நகரில் இரவு நேரத்தில் வெளியில் சென்று வீதிகளில் உலாவிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதனையடுத்தே இலங்கை கிரிக்கட்டின் தலைவர் சம்மி சில்வா இலங்கை கிரிக்கட் அணிக்கான முகாமையாளருடன் உரையாடியுள்ளதோடு, குறித்த இருவரையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அவர்கள் இருவருக்கும் எதிரான மேலதிக நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து தீர்மானிக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கட்டின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்தார்.

Video link

Via- CapitalNews