பொதுநலவாய விளையாட்டு விழாவின் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றியை பதிவுசெய்துள்ளன.
தகுதிகாண் போட்டிகள் கடந்த இரு நாட்களாக நீர்கொழும்பு கடற்கரை கரப்பந்தாட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
அஷான் ரஷ்மிக மற்றும் மலிந்த யாப்பா ஆகியோர் இலங்கை ஆண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், சதுரிக்கா மதுஷானி மற்றும் தீபிகா பண்டார ஆகியோர் இலங்கை பெண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இலங்கையின் இரண்டு அணிகளும் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றிருந்ததுடன், இறுதிப்போட்டிகளில் இலங்கை ஆண்கள் அணி, மாலைத்தீவுகளையும், இலங்கை பெண்கள் அணி சிங்கபூர் அணியையும் வீழ்த்தியிருந்தனர்.
2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழா இங்கிலாந்தின் Birmingham நகரில் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.