சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 151 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ஓட்டங்களை பெற்றாலும், அதன் பின்னர் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு வலுவடைந்தது.
தமிழக வீரர் ஷங்கர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார், இறுதி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமாரின் ஓவரில் பொல்லார்ட் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 17 ஓட்டங்களைக் குவிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.
இன்றைய போட்டியில் பொல்லார்ட் புதிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.
கெயில், டீ வில்லியர்ஸ் ஆகியோரை அடுத்து IPL போட்டிகளில் 200 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
கையில் – 351 (சிக்ஸர்கள்)
டீ வில்லியர்ஸ் – 231
ரோஹித் – 217
டோனி – 216
பொல்லார்ட் – 201
கோஹ்லி – 201
200 சிக்ஸர்களை விளாச ஒவ்வொருவரும் எடுத்த போட்டிகள்.
68: கெயில்
137: டீ வில்லியர்ஸ்
150: பொல்லார்ட் *
165: டோனி
180: கோஹ்லி
185: ரோஹித்
#MIvSRH