போட்டிக்குப் பின்னர் மைதானத்தில் சண்டையிட்ட மிக்கி ஆதர் மற்றும் தசுன் சானக்க- நடந்தது என்ன?

போட்டிக்குப் பின்னர் மைதானத்தில் சண்டையிட்ட மிக்கி ஆதர் மற்றும் தசுன் சானக்க- நடந்தது என்ன?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.  பரபரப்பான இறுதி வரைக்கும் விறுவிறுப்பை ஏற்படுத்திய ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாகவே முன்னணி வீரர்கள் ஆடுகளம் விட்டகன்றபின்னும் எட்டாவது விக்கட்டில் மற்றும் புவனேஸ்வர் குமார், சஹார் ஆகியோோர் மிகச்சிறந்த 84 ஓட்டங்களை பெற்று அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர். இந்த வெற்றிக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அணித்தலைவர் சானக்க  ஆகியோர் மைதானத்தில் வாய் தகராறில் ஈடுபட்டமையை காணக்கூடியதாக இருந்தது .

இதனை தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பியது, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆர்னோல்ட் பல விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

இந்த வாதம், இந்தப் பேச்சு எல்லாம் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்க வேண்டுமே தவிர அதற்கு வெளியில் இருக்கக் கூடாது என்கின்ற விதமான கருத்துக்களை ரசல் ஆர்னல்ட் தெரியப்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக்கி ஆதர், தசுன் சானக்க ஆகியோர் என்ன வாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத விடயமாக இருந்தாலும், களத்தடுப்பு மற்றும் பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய விதம் குறித்து அவர் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கலாம் என செய்திகள் வெளிவருகின்றன .

ரஜித்த, சந்தகன் ஆகியோர் அதிகமான ஓட்டங்களில் வாரி வழங்கிய நிலையில் அவர்களுக்கு தொடர்ச்சியான ஓவர்களை தசுன் சானக கொடுத்துக் கொண்டிருந்தார், ஆனால் சமிக்க கருணாரத்ன அல்லது தன்னுடைய ஓவர்களையும், தனஞ்சய டி சில்வா ஆகியோரையும் பந்து வீசுவதற்கு அணித்தலைவர் அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் நேற்றைய போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2 -0 என்று வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.