போட்டியின் நடுவே பேப்பரில் எழுதி டிராவிட் கொடுத்து விட்டது என்ன ?

போட்டியின் நடுவே பேப்பரில் எழுதி டிராவிட் கொடுத்து விட்டது என்ன ?

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய நாளில் நிறைவுக்கு வந்தது.

முதல் போட்டியில் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதனால் இன்று(29) இரவு 7 மணிக்கு இடம்பெறவிருக்கும் மூன்றாவதும் இறுதியுமான ட்வென்டி ட்வென்டி போட்டி தீர்மானம் மிக்க போட்டியாக அமையவுள்ளது.

இந்திய அணி போட்டியில் 132 ஓட்டங்கள் மட்டும் பெற்றுக் கொண்டது, 133 இலக்கோடு ஆடியே இலங்கைக்கு தனஞ்செய டி சில்வா, சாமிக கருணாரத்ன  ஆகியோர் ஒரு அற்புதமான துடுப்பாட்ட பங்களிப்பை நல்க, இறுதியில் மிகச்சிறந்த ஒரு வெற்றியை இலங்கை நீண்ட காலத்துக்குப் பின்னர் பெற்றுக்கொண்டது.

போட்டியில் இடைநடுவில் 18 ஓவர்கள் நிறைவுக்கு வந்தபோது, இரண்டு ஓவர்களில் இருபது ஓட்டங்கள் இலங்கையின் வெற்றிக்கு தேவையாக இருந்தது. அப்போது மைதானத்தில் மழை லேசாக பொழிய ஆரம்பித்தது.

நடுவர்கள் போட்டியை இடைநிறுத்தும் முடிவுக்கு வந்தனர், ஆனால் திடீரென்று மழை கொஞ்சம் ஓய்ந்த பிறகு போட்டியைை தொடர நடுவர்கள் முடிவெடுத்தனர்.

இதற்கிடையில் ராகுல் டிராவிட் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்துவந்து, ஒரு காகிதத்தில் எதையோ எழுதி மைதானத்துக்குள் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார்.

12வது வீரர் விரைந்து அந்த காகிதத்தை இந்திய வீரர்களிடம் கையழித்துவிட்டு சென்றார்.

அந்த பேப்பரில் அப்படி என்ன எழுதி இருந்தது என்்று நெட்டிசன்கள் இப்போது தேட ஆரம்பித்திருக்கிறார்கள் ,18வது ஓவர் நிறைவில் மழை வந்தபோது இலங்கை டக்வோர்த் லூயிஸ் முறை மூலமாக 3 ஓட்டங்களால் பின் நிலையில் காணப்பட்டது.

சில வேளைகளில் போட்டி தடைபட்டால் (D/L) முறை மூலமாக எவ்வாறு ஓட்டங்கள் பெறப்பட்டிருக்க வேண்டும் என்பதையே டிராவிட் அனுப்பி வைத்திருக்கலாம் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன .

ஏற்கனவே இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது டிராவிட் இந்த மாதிரி வீரர் ஒருவரிடம் தகவலை அனுப்பி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

36 பந்துகளில் 37 ஓட்டங்கள தேவையாகவிருக்க சஹார் , புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு  ஹசரங்கவின் ஓவரை தவிர்த்து விளையாடுமாறு ராகுல் சஹாரிடம்  தகவல் சொல்லி அனுப்பி இருந்தார் என்பது இங்கே நினைவுபடுத்ததக்கது.

டிராவிட் ஒரு தரமான பயிற்சியாளர் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறார்.