போராட்ட குணம் கொண்டவர்கள் தோற்பதில்லை ❤️

போராட்ட குணம் கொண்டவர்கள் தோற்பதில்லை ❤️

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் இடம் பிடிப்பதே என்னுடைய இலக்கு என்று கடந்த ஆண்டு (2021) தினேஷ் கார்த்திக் ஒரு ஊடகம் ஒன்றுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார் .

அந்த காலகட்டங்களில் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் பெரிதாக விளையாடுவதில்லை ,புதிதாக வர்ணனையாளர் என்னும் பாத்திரத்தை ஏற்று ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஸ்சிப் டிராபி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் Sky spoy சார்பில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியில் இருந்தார் .

உண்மையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பிடிப்பதே என்னுடைய இலக்கு என்ற அந்த கருத்தை தெரிவித்த போது, அதனை படித்த எனக்கு மிகப்பெரிய நகைப்பாக இருந்தது .

இந்திய கிரிக்கெட்டில் எத்தனையோ இளசுகள் அணிக்குள் வருவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முப்பத்து ஆறு வயதாக இருக்கும் DK கிரிக்கெட்டின் அந்திம காலத்தில் இருக்கும் ஒருவர் எப்படி Comeback கொடுக்க முடியும் என்பதே என்னுடைய மிக முக்கியமான கேள்வியாக இருந்தது .

ஆனால் நான் மட்டுமல்ல நீங்களும் எதிர்பார்க்காத விதமாக DK இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குள் மீண்டும் ஒருமுறை நுழைந்திருக்கிறார் .

தென்னாபிரிக்காவுடனான தொடரில் தினேஷ் கார்த்திக் தன் திறமையை மிகச் சிறப்பாக வெளிக்காட்டும் பட்சத்தில், நிச்சயமாக கடந்த ஆண்டு கண்ட கனவு போல் இந்தியாவின் உலக டுவென்டி டுவென்டி அணியில் இடம் பிடிப்பது இலகுவாகிவிடும் ?

போராட்டக்காரர்கள் வாழ்நாளில் தோற்றதாய் சரித்திரத்தில் எங்கும் இல்லை என்பேன் .

DK ஓர் போராட்ட காரன் ❤️

#DineshKarthik #DK

via – T.Tharaneetharan

YouTube காணொளிகளுக்கு செல்லுங்கள் ?

தென் ஆபிரிக்காவை சந்திக்கவுள்ள இந்திய அணி விபரம் ?