மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா

மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா

மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் எல்லிஸ் பெர்ரி, தஹிலா மெக்ராத் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 68 ரன்களையும், தஹிலா மெக்ராத் 57 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் எமி சதர்வைட்டைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்து நடையைக் கட்டினர்.
இதனால் 30.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தும் 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டார்சி பிரௌன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Abdh