மகளிர் உலகக் கிண்ணம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்திரேலிய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதின. மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டொஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.
தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார். இதனையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
45 ஓவரில் 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க வீராங்கனை டியான்ட்ரா டாட்டின்(34), ஹேலி மேத்யூஸ்(34), டெய்லர் (48) ஆகியோர் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை எடுத்தனர்.
அடுத்து வந்த வீராங்கனை சொற்ப ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
நாளை மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏப்ரல் 3 தேதி நடக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடம் பலபரீட்சை நடத்தும்.