மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: அட்டவணையை அறிவித்தது ஐசிசி

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: அட்டவணையை அறிவித்தது ஐசிசி

நியூசிலாந்தில் அடுத்த வருடம் மகளிர் அணிகளுக்கு இடையேயாப ஒருநாள் ஓவர் உலகக் கோப்பைப் தொடர் நடைபெறுகிறது. மார்ச் 4 முதல் தொடங்கும் மகளிர் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி மொத்தம் 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

இந்த 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் நிசிலாந்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

#ABDH