மகளிர் கிரிக்கட் அரங்கின் கோலியாக வலம்வரும் அவுஸ்ரேலிய அணித்தலைவர் லானிங் …!

நியூஸிலாந்தில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக் கிண்ண போட்டிகளில் இன்றைய நாளில் இடம்பெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை தோற்கடித்த அவுஸ்ரேலிய அணி முதல் அணியாக உலகக்கிண்ணத்தில் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

278 எனும் அபார இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணிக்கு அதன் தலைவி மேக் லானிங் 97 ஓட்டங்களை அபாரமாக பெற்றுக் கொடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக மகளிர் அரங்கில் சேசிங்கின் போது அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனைகள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ODIகளில் வெற்றிகரமான ரன் சேஸ்களில் அதிக ரன்கள் பெற்றவர்கள் விபரம் ?

2378 – ??மெக் லானிங்** ?

2181 – ??மிதாலி ராஜ்

1721 – ?சாரா டெயிலர்

1716 – ?சார்லோட்டி எட்வேர்ட்ஸ

1597 – ??பெலிண்டா கிளார்க்

? ஐசிசி/கெட்டி
#CWC22 #AUSvIND

இதன்மூலமாக ஆடவர் கிரிக்கட் அரங்கிலேயே சேசிங் மாஸ்டராக திகழும் விராட் கோலி போன்று மகளிர் கிரிக்கெட் அரங்கில் ஆஸி அணியின் தலைவி திகழ்ந்து வருவதாக பாராட்டுக்கள் குவிகின்றன.