மகளிர் கிரிக்கெட்டின் சனத் – சமாரி அதப்பத்து (Happy Birthday வீடியோ)

மகளிர் கிரிக்கெட்டின் சனத் – சமாரி அதப்பத்து (Happy Birthday வீடியோ)

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை சமாரி அத்தப்பத்து இன்று 31 வது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார்.

31 வயதான சமாரி அத்தப்பத்து இலங்கை மகளிர் அணிக்காக 84 ஒருநாள் போட்டிகளிலும் 85 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

2017 ம் ஆண்டு மகளிர் உலக கிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இவரது அதிரடி ஆட்டம் மறக்க முடியாத வாழ்நாள் இன்னிங்ஸ் எனலாம்.

குறித்த போட்டியில் 143 பந்துகளில் 22 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்து ஆட்டம் இழக்காது 178 ஓட்டங்களை பகிர்ந்தார்.

அந்த காணொளியை பகிர்ந்து ICC வீடியோவை பகிர்ந்துள்ளதுடன் பிறந்த நாள் வாழ்த்தும் பகிர்ந்துள்ளது.

காணொளி இணைப்பு.