மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நாளை ஆரம்பம்..!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்குவதற்கு முந்தைய பயிற்சி ஆட்டங்கள் அபுதாபியில் நாளை (21) தொடங்குகிறது.

10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் நாளை (21ம் தேதி) மற்றும் 23ம் தேதிகளில் 10 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.இதில் ஒவ்வொரு அணியும் தலா தலா இரண்டு போட்டிகளில் விளையாடும்.

பயிற்சிப் போட்டிகளை ஆரம்பித்து, இலங்கை அணி நாளை நெதர்லாந்துக்கு எதிராக டாலரன்ஸ் ஓவல் மைதானத்தில் நுழைகிறது. பகல் மற்றும் இரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த இரு அணிகளும் முன்னதாக 2013 உலக இருபதுக்கு 20 தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் சந்தித்தது, அங்கு டக்வொர்த் லூயிஸ் கோட்பாட்டின் படி இலங்கை 33 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.