மகேலவின் மாஸ்டர் மைண்ட் சரி என்று நிரூபித்த நீசம் ..!

மகேலவின் மாஸ்டர் மைண்ட் சரி என்று நிரூபித்த நீசம் ..!

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் நியூசிலாந்தினுடைய சகலதுறை ஆட்டக்காரர் ஜிம்மி நீஷம் வெறுமனே 50 லட்சத்துக்கு உள்வாங்கப்பட்டார்.

8 கோடியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கோல்டனைலை விடுவித்து விட்டு அவரை 5 கோடிக்கு ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் பெற்றுக்கொண்டது.

மீதமான மூன்று லட்சத்திலே அவர்கள் பியூஸ் சாவ்லாவை இரண்டரை கோடிக்கும் மீதமான 50 லட்சத்தில் நீசமை அவர்கள் ஏலத்திலே பெற்றுக்கொண்ட மஹெல ஜெயவர்த்தனவின் மாஸ்டர் மைண்டில் இவ்வாறு வீரர்களை ஏலம் எடுக்கப்பட்டது என்று எல்லோரும் புகழ்ந்து பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது .

இன்று இடம்பெற்ற நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் 16 பந்துகளில் 45 ஓட்டங்களை ஜிம்மி நீஷம் விளாசினார்.

அதேபோன்று அவுஸ்திரேலியாவுக்கு இறுதி ஓவரில் 15 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலை இருந்த போது அந்த இறுதி
ஓவரை வீசிய நீசம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 4 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியை தேடிக்கொடுத்தார்.

ஆனால் 14 மற்றும் 15 கோடியில் RCB அணியால் பெற்றுக்கொள்ளப்பட்ட மேக்ஸ்வெல் ஜாமேசன் ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் சொதப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

மஹேல ஜெயவர்தன இவ்வாறு ஒரு திறமையான சகலதுறை வீரரை
தன்னுடைய மாஸ்டர் மைண்டை பயன்படுத்தி 50 லட்சத்துக்கு பெற்றுக் கொண்டார் என்பதற்கு நீசம் சான்று பகர்கிறார் .

வாழ்த்துக்கள் மஹேல மற்றும் நீசம் .