மட்டையாளும் தொழிற்நுட்பங்களின் தந்தை- அசாதாரணன வில்லியேர்ஸ்..!

அசாதாரணன்!

கிரிக்கெட்டை சச்சின் காலத்திற்கு முன் பின் என ச.மு ச.பியாக பிரித்திருக்கையில்தான், மரபு கிரிக்கெட்-நவீன கிரிக்கெட்-அதிநவீன கிரிக்கெட் என்று மூன்றாய் பிரிக்க வைத்தவர் டிவிலியர்ஸ்!

நவீன கிரிக்கெட்டின் முதன்மை மட்டையாளர் சச்சின் என்றால், அதிநவீன கிரிக்கெட்டின் முதன்மை மட்டையாளர் டிவிலியர்ஸ்!

ஓ இந்தப் பந்தை இப்படி அடிக்கலாமா என்று இரசிகர்களின் கண்களை விரிய வைத்தவர் சச்சின் என்றால், அட இந்தப் பந்தை இந்தத் திசையில் கூட அடிக்கலாமா என்று வாயைப் பிளக்க வைத்தவர் டிவிலியர்ஸ்!

டிவிலியர்ஸின் மட்டையாளும் தொழிற்நுட்பங்கள் இன்னொருவருக்கும் வாய்க்கும் என்றாலும், அவர் கிரிக்கெட்டின் ஒரு புது ஆட்ட பாணியின் வடிவத்தின் துவக்கத்தின் தந்தை.

அதேபோல் டிவிலியர்சிஸிருந்து ஒருவர் அதிநவீன கிரிக்கெட்டிற்கு மேலும் மெருகேற்றிக்கொள்ள முடியாத அளவிற்கு அதன் எல்லையைத் தொட்டுவிட்டவர் டிவிலியர்ஸ். இனி ஒரு டிவிலியர்ஸ் வரலாம் ஆனால் டிவிலியர்ஸை விஞ்ச எதுவுமில்லை.

டிவிலியர்சின் ஓட்ட எண்களைப் பற்றி ஒருவர் பெரிதாய் பேசுகிறார் என்றால் அவர் டிவிலியர்சின் அற்புத திறனுக்குள் விழுந்து மரபு கிரிக்கெட்டை மறக்காதவர் என்றே அர்த்தம். நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழும் அந்த அசாதாரணத்தை எத்தனை வார்த்தைகளில் விவரித்தாலும் அது அதற்குள் முழுமை பெறாது.

டிவிலியர்ஸின் ஆட்டங்களை நேரடியாகவோ நேரலையில் தொலைக்காட்சியிலோ காணப் பெற்றவர்; இனிவரும் தலைமுறைகளிடம் “நான் டிவிலியர்ஸின் ஆட்டத்தைப் பார்த்தவன்/ள்” என்று பெருமையாக பாக்கியவானாகவே சொல்லிக்கொள்ளலாம்.

டிவிலியர்ஸ் குவித்த ஓட்டங்களை விட அதற்காக ஆடிய விதம்தான் அசாதாரணமானது. நின்ற இடத்திலிருந்து ஐந்தாறு மீட்டர் தொலைவில் விழுந்து வரும் பந்தை யாரால் எக்ஸ்ட்ரா கவரில் ஆறுக்கு அடிக்க முடியும்? எவ்வளவு வேகத்தில் கணித்து அதை அவ்வளவு வேகத்தில் அடிக்க சிறப்பு சக்தியில்லாமல் முடியாது.

ஹாக்கி-கோல்ப் அடிவகைகளை கிரிக்கெட்டிற்குள் கொண்டுவந்து ஒரு ரஃபி வீரன்போல் பந்துவீச்சாளர்களிடம் மோதி எதிரணி இரசிகர்களுக்கும் கதாநாயகனாகி போன அசாதாரணனான டிவிலியர்ஸ் பிறவி கிரிக்கெட்டர் கிடையாது பிறவி விளையாட்டு வீரர்!

ஹே சாம்பியன் செமயா வாழ்ந்திருங்க ஹேப்பி பர்த் டே!

Richards