மதிக்கப்படாத இடத்தில் மதிப்பை தேடாதீர்கள்- சமிந்த வாஸ்.

மதிக்கப்படாத இடத்தில் மதிப்பை தேடாதீர்கள்- சமிந்த வாஸ்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த சமிந்த வாஸ் நேற்றைய நாளில் திடீரென பதவி விலகுவதாக அறிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்ய இலங்கை அணி தயாராகவிருக்க அதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னர் சமிந்த வாஸின் இந்த விலகல் அமைந்திருந்தது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் வாஸ் ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

“சரியான இடம் உங்களை சரியான வழியில் மதிப்பிடும், ஒரு தவறான இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் பெறுமதி அவர்களுக்கு தெரியவர வாய்ப்பில்லை. அவர்களை தவறாகவே உங்களை வழிநடத்த முற்படுவார்கள்.

தவறான இடத்தில் நீங்கள் இருந்துகொண்டு உங்கள் மரியாதை தெரியாமல் அவர்கள் நடந்துகொண்டால் நீங்கள் கோபப்பட வேண்டாம்.

உங்கள் மதிப்பை அறிந்தவர்கள் உங்களைப் பாராட்டுகிறார்கள் , உங்கள் மதிப்பை யாரும் காணாத இடத்தில் அங்கே நீங்கள் இருக்க வேண்டாம். உங்கள் மதிப்பை அறிந்து கொள்ளுங்கள் ” இவ்வாறு என் தந்தை சொன்னார் என்று சமிந்த வாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.