மதிவாணன் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து திடீர் விலகல்..!

ஸ்ரீ இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலில் போட்டியிடவிருந்த கே.மதிவாணன் மற்றும் நிஷாந்த ரணதுங்கா மற்றும் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் பண்டுல வர்ணபுரா ஆகிய மூன்று பேர் கொண்ட குழு இலங்கை கிரிக்கெட் தேர்தலில் இருந்து தங்கள் பெயர்களை வாபஸ் பெற்றுள்ளது.

இதன்மூலமாக தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவராக திகழும் ஷம்மி சில்வா உள்ளிட்டவர்களின் குழுவினர் மீண்டும் பதவிகளுக்கு போட்டியின்றி தெரிவு செய்யப்படும் நிலமையை உருவாக்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தேர்தல் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில், மதிவாணனை தலைவராகவும், செயலாளராக நிஷாந்த ரணதுங்காவையும், துணைத் தலைவராக வார்ணபுரவையும் பதவிக்கு கொண்டுவர தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தவர்கள் அதிலிருந்து விலத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் இப்போது விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் ஐ.சி.சி தரவரிசையில் மிகவும் பின்தங்கி உள்ளது, தற்போதைய நிர்வாகத்தினரின் தவறான நிர்வாகம் மற்றும் நிதி , நிர்வாகம் என்பனவும் சீர்குலைந்துள்ளது,

நிர்வாகத்தில் குறைபாடுகள் காரணமாக வீரர்கள் தங்கள் ஒப்பந்த வருமானத்தில் பெரும் பகுதியை இழக்க வேண்டியிருந்தது. பக்கச்சார்பற்ற தன்மையும் நம்பிக்கையும் துரதிர்ஷ்டவசமாக தவறாக இடம்பிடிக்கப்பட்டுள்ளன.

வருடாந்த கணக்குகளை தாமதமாக சமர்ப்பிப்பதன் மூலமும், அரசியலமைப்பின் படி கணக்காய்வாளர் நாயகத்தின் ஒப்புதலைப் பெறாமலும் இருந்ததால், அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்,

 

பக்கச்சார்பற்ற தன்மையை நிலைநிறுத்துவதில் நிர்வாகம் தவறுகின்றமையும் தங்கள் விலகிலுக்கான காரணமாக குறித்த குழுவினர் தெரியப்படுத்தியுள்ளார்.

“பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுவால் (Cope) கூட அவர்களின் தவறான செயல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன, இது ஒரு சரியான நிர்வாகத்திற்கான முன்மாதிரி விடயங்கள் அல்ல என்று குறித்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.

எஸ்.எல்.சி.யில் தற்போதைய வாக்களிப்பு முறையும் இவர்களது விலக்கலுக்கான காரணம் எனப்படுகின்றது

இந்த ஆண்டு பிப்ரவரி 20 க்கு பின்னர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தை தொடர்வதை நிஷாந்த ரணதுங்க விளையாட்டு துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சவாலுக்கு உட்படுத்தியிருந்தார்., ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் அரசியலமைப்பின்படி அவர்களின் இரண்டு ஆண்டு பதவி காலம் குறித்த நாளுடன் நிறைவு வந்துவிட்டது.

இதனால் மார்ச் 28 அன்று,நிஷாந்த ரணதுங்கா மேற்கொண்ட சவாலை உறுதிப்படுத்தி, இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் பரிந்துரைத்தார்.

தேர்தல் நடத்தப்படும் வரை எஸ்.எல்.சி.யை நிர்வகிக்க பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சர் முடிவெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் ஷம்மி சில்வா நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்தப்படும்வரை முன்னதாக காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மதிவாணன் குழுவினரும் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுள்ளமை மீண்டும் பழைய நிர்வாத்தினரே ஆட்ச்சிக்கு வரும் நிலையை தோற்றுவித்துள்ளது.