மத்தியூஸ் , திமுத் அணிக்கு வருகிறார்களா – இந்திய தொடருக்கு மேலதிக 10 வீரர்கள் இணைப்பு ..!
இந்த மாதம் 13 ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான தொடருக்காக இலங்கை கிரிக்கெட் மேலதிகமாக 10 வீரர்களை அழைத்துள்ளது.
Bio Bubbles எனப்படும் உயிர்க்குமிழி முறைக்குள் இணையுமாறு 10 வீரர்களை நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இணைத்துள்ளது.
அசான் பிரியஞ்சன் , அசேல குணரத்ன ,அஞ்சலோ பெரேரா, சந்துன் வீரக்கொடி ,மிலிந்த சிறிவர்தன ,டில்ஷன் முனவீர ,சத்துரங்க டி சில்வா ,ரோஷென் சில்வா ,பிரபாத் ஜெயசூரியா ,லஹிரு மதுஷங்க இவர்களே குறித்த 10 வீீீீரர்களாவர்.
ஆனால் இலங்கையின் மூத்த வீரர்களான மெத்தியூஸ், திமுத் கருணாரத்ன, சந்திமா ல், திரிமான்ன , போன்ற வீரர்கள் அழைக்கப்படவில்லை என்பது ஆச்சரியத்துக்குரியது.
இந்தியாவுக்கு எதிரான T20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான உத்தேச அணியின் ஒரு பகுதியாக இவர்களும் இருப்பார்கள் என்று அறியவருகின்றது.
புதிதாக அழைக்கப்பட்ட அனைத்து வீரர்களும் முன்னதாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்த 40 வீரர்கள் பட்டியலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினமன் கிராண்ட் ஹோட்டலில் 10 வீரர்கள் தொடர்ந்து உயிர் குமிழி முறைக்குள் வந்துள்ளனர்.
தவான் தலைமையிலான இந்திய அணியுடனான தொடர் வரும் 13 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.