மத்தியூஸ் ,திரிமான்ன, திமுத் இல்லாத இலங்கையின் 60 பேர் கொண்ட உத்தேச T20 அணி ..!

மத்தியூஸ் ,திரிமான்ன, திமுத் இல்லாத இலங்கையின் 60 பேர் கொண்ட உத்தேச T20 அணி ..!

ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கையின் SLC T20 தொடருக்கான 60 பேர் கொண்ட அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக இந்த தொடர் மூலமாக இலங்கையின் உலகக் கிண்ணத்துக்கான டுவென்டி டுவென்டி அணியை தேர்வு செய்யப்படும் என நம்பப்படுகிறது.

4 அணிகளுக்கிடையிலான இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சந்திமால், தசுன் சானக, தனஞ்சய டீ சில்வா, அண்ட  பிரியஞ்சன் ஆகியோர் அணிகளின் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

60 பேர் கொண்ட இந்த அணிக்குள் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்தியூஸ் ,திரிமான்ன ஆகிய வீரர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாகT20 உலகக் கிண்ணத்துக்கான தேர்வில் அவர்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டார்கள் என்ற செய்தி புலனாகிறது.